சனி, 7 ஜூன், 2014

30 ஆண்டு காலமாக நடைபெற்ற போரால் 18600 பேர் காணாமல் போயுள்ளனர்; இலங்கை அரசின் விசாரணைக் குழுவிடம் புகார்!!



இலங்கையில் கடந்த 30 ஆண்டு காலமாக நடைபெற்ற போரால் 18600 பேர் காணாமல் போயுள்ளதாக இலங்கை அதிபர் ராஜபக்சேவால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழு முன் புகார் அளிக்கப்பட்டுள்ளது. குறித்த தகவலை விசாரணைக்கழுவில் இடம்பெற்றுள்ள அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தினார்.

குறித்த விசாரணைக்குழுவானது கடந்த ஜனவரி மாதம் முதல் கிளிநொச்சி, யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு ஆகிய மூன்று இடங்களில் தனது விசாரணையை முடித்துள்ளது. நான்காவதாக
மட்டக்களப்பில் இந்த வாரம் விசாரணை நடத்தப்படவுள்ளது. ஒட்டுமொத்தமாக இதுவரை 18600 புகார்கள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

இந்த விசாரணைக்குழு 1990 ஆம் ஆண்டு முதல் 2009 ஆண்டு வரை யார் யார் காணாமல் போயுள்ளார்கள் என விசாரித்து வருகிறது. புகார் அளித்தவர்களிடம் விசாரணை நடத்தி உண்மைத் தன்மையை இக்குழு தெரிந்து கொள்கிறது. இன்று விசாரணைக்கு வருமாறு 59 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் 49 பேர் மட்டுமே விசாரணைக்காக ஆஜராகியதாக விசாரணைக்குழுவின் செயலாளரான குணதாச கூறியுள்ளார்.

இன்று புதிதாக மேலும் 16 பேரை காணவில்லை என புகார் அளிக்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டார். அங்குள்ள குருக்கள் மடத்தில் 163 பேர் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக இன்றைய விசாரணையின்போது பலர் சாட்சியமளித்துள்ளனர். மேலும் விசாரணை தொடர்ந்து நடைபெறவுள்ளi குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, ஐ.நா தலைவர் பான் கீ மூனை இலங்கை அமைச்சரான டக்ளஸ் அழகப்பெருமாள் இரகசியமாக சந்தித்து பேசியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றபோதிலும் குறித்த விடயம்தொடர்பில் இலங்கை அரசு உறுதியான தகவலை வெளியிடவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக