திங்கள், 2 ஜூன், 2014

பெரிய வெங்காய உற்பத்தியில் தன்னிறைவு...!!

பெரிய வெங்காய உற்பத்தியில் தன்னிறைவை அடைவதற்காக பெரிய வெங்காய விவசாயிகளுக்கு 02 கோடியே 62 இலட்சம் ரூபா நிதி கமநல வங்கி நிதியத்தினால் வழங்கப்படும்.

இந்தப் பெரும் போகத்தில் இந்த நிதி வழங்கப்பட உள்ளது. தற்போது பெரிய வெங்காயத்தை உற்பத்தி செய்யும் அநுராதபுரம், மாத்தளை மாவட்ட விவசாயிகளுக்கு 09 வீத குறைந்த வட்டி வீதத்தில் கடன் வழங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விசேட கருத்திட்ட அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்தார்.

கெக்கிராவ கமநல சேவைகள் நிலையத்தில் அமைச்சர் அண்மையில் 160 விவசாயிகளுக்கு கடன் உதவிகளை வழங்கினார். அநுராதபுரம், மாத்தளை மாவட்டங்களில் மிகவும் சிறந்த முறையில் பெரிய வெங்காய உற்பத்தி
மேற்கொள்ளப்படுகிறது.

உயர்ரக விதைகளையும் உரத்தையும் அத்துடன் உற்பத்திக்காக நிதி வசதிகளையும் வழங்கி பெரிய வெங்காயத்தில் இலங்கையை தன்னிறைவு காணச் செய்வதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசின் குறிக்கோள் என்றும் அமைச்சர் தொடர்ந்து தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக