திங்கள், 30 ஜூன், 2014

களுத்துறையில் ஐந்து புலனாய்வு உத்தியோகத்தர்கள் பணி நீக்கம்....!!!!

களுத்துறையில் ஐந்து புலனாய்வு உத்தியோகத்தர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறித்த ஐந்து புலனாய்வு உத்தியோகத்தர்களும்,  புலனாய்வுப் பணிகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு சாதாரண பொலிஸ் கடமைகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

களுத்துறை பிராந்தியத்திற்குப் பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.இந்திரன் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.

களுத்துறை பொலிஸ் நிலைய புலனாய்வுப் பிரிவு பொறுப்பாளர் உள்ளிட்ட ஐந்து உத்தியோகத்தர்கள் இவ்வாறு புலனாய்வுப் பிரிவிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

அளுத்கம, மத்துகம, மிகத்தென, தினியாவல மற்றும் தெபுவன ஆகிய பொலிஸ் நிலையங்களின் புலனாய்வுப் பிரிவுகளுக்காக புதிய உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக