வெள்ளி, 20 ஜூன், 2014

மோட்டார் சைக்கிள், பஸ் மோதி விபத்து இருவர் பலி...!!!!


மொனராகலையில் நேற்றுக் காலை பஸ் வண்டியும் மோட்டார் சைக் கிளொன்றும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இவ்விபத்து நேற்றுக் காலை 8.30 மணியளவில் மெதகும்புர பிரதேசத்தில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். மொனராகலையிலிருந்து பஹதஅராவ பிரதேசத்திற்கு நேற்றுக் காலை பயணம் செய்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ் வண்டியுடன்.

அதன் எதிர்த் திசையில் பயணம் செய்த மோட்டார் சைக்கிளொன்று மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ள னர். மேலும் இச் சம்பவத்தில் படுகாயமடைந்துள்ள இன்னுமொரு நபர் மொனராகலை வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.



மொனராகலை பொலிஸார் இவ்விபத்து தொடர்பில் விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக