இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் வீட்டை வீடியோ படம்பிடித்த குற்றச்சாட்டின் பேரில் மூன்று தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பில் அமைந்துள்ள சந்திரிக்காவின் வீட்டிற்கு அருகாமையில் சந்தேகத்திற்கு இடமான முறையில் சஞ்சரித்து, வீட்டைப் படமெடுத்துள்ளதாக பொலிஸார் குற்றம் சுமத்தியுள்ளனர்.
வீட்டைப் படமெடுத்த மூன்று தமிழர்களை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.
வட மாகாணத்தைச் சேர்ந்த இவர்களிடமிருந்து வீடியோ கமரா உள்ளிட்ட சில பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளைப் பேணியிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
சந்தேக நபர்களிடம் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், சந்தேக நபர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக