திங்கள், 23 ஜூன், 2014

வவுனியா பூந்தோட்டம் கலைமகள் முன்பள்ளியின் 17 ஆவது வருடாந்த விளையாட்டு போட்டி!! (படங்கள் இணைப்பு)

(ஓவியன்) வவுனியா   பூந்தோட்டம் கலைமகள்  முன்பள்ளியின் 17 ஆவது வருடாந்த விளையாட்டு போட்டி நேற்று (22/06) மாலை 2.00 மணியளவில் பூந்தோட்டம் விளையாட்டு அரங்கத்தில் சனசமூக நிலையத் தலைவர் திரு க.வேலாயுதபிள்ளை அவர்களின்   தலைமையில் இடம்பெற்றது.


இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக மாவட்ட சமூகசேவை உத்தியோகஸ்தர் திரு எஸ்.எஸ்.வாசன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக, வட மாகாண சுகாதார அமைச்சர் திரு ப.சத்தியலிங்கம், வட மாகாண சபை உறுப்பினர் திரு ம.தியாகராசா, பூந்தோட்டம் பொலிஸ் உத்தியோகஸ்தர் திரு. கேரத் ஆகியோரும், கௌரவ விருந்தினர்களாக நரசிங்க ஆலய பிரதம குரு இரவீந்திர உமாசுதக்குருக்கள், வவுனியா நகரசபையின் முன்னாள்  உப நகரபிதா திரு.க.சந்திரகுலசிங்கம்(மோகன்), திரு இ.பஞ்சலிங்கம், முன்பள்ளி வலய இணைப்பாளர் திருமதி.சி.அருள்வேல்நாயகி, திரு.இ.இராமச்சந்திரன், திருமதி வ.சசிகலா, திரு.சூ.ஜெபநேசன், திரு த.பரதலிங்கம், திரு ந.கருணாநிதி, திரு க.திருவிளங்கம், திரு க.கனகரத்தினம் ஆகியோர் கலந்து நிகழ்வுகளை சிறப்பித்தனர்.

இந் நிகழ்வில் சிறார்களின் விளையாட்டு போட்டிகள்,உடற் பயிற்சி கண்காட்சிகள் மற்றும் பரிசளிப்பு வைபவங்கள் என்பன  இடம்பெற்றன.

































































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக