மட்டக்களப்பு மாவட்டம் கரடியனாறு பொலிஸ் பிரிவில் உள்ள வேப்பவெட்டுவான் காடுகளில் புதையல் தோண்ட முயற்சித்த 4 பேர் சனிக்கிழமை இரவு கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
10 பேர் கொண்ட ஒரு குழுவினர் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட ஆயத்தமானபோது படையினர் துரிதமாகச் செயற்பட்டு அவர்களைக் கைதுசெய்ய முயற்சித்துள்ளனர்.
அவ்வேளையில் ஆறுபேர் தப்பியோடிவிட்டதாகவும் நான்கு பேரைக் கைதுசெய்த இராணுவத்தினர் அவர்களை கரடியனாறு பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
கைதுசெய்யப்பட்ட நால்வரில் ஒருவர் ஓய்வு பெற்ற இராணுவ வீரர் என்றும் இவர் பொலன்னறுவை ஹிங்குறாகொட பகுதியைச் சேர்ந்தவர் என்றும் பொலிஸார் கூறினர்.
இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக