திங்கள், 16 ஜூன், 2014

கோண்டாவில் பகுதியில் வாள்வெட்டுக்கு இலக்காகி இளைஞர் உயிரிழப்பு!!

கோண்டாவில் பகுதியில் உள்ள இளைஞர் குழுவின் வாள்வெட்டுக்கு இலக்காகி இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். இன்று மாலை 6 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் கோண்டாவில் கிழக்கு அரசடிப்பிள்ளையர் கோயிலடியைச் சேர்ந்த ரவீந்திரன் சுகிர்தன் (வயது 21) என்ற இளைஞர் உயிரிழந்தார். சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது - இன்று மாலை மோட்டார் சைக்கிளில் வந்த நால்வர் கொண்ட குழுவினால் உயிரிழந்த
இளைஞரின் வீடு மீது கல்வீசித் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதில் அவரது சகோதரிக்கு காயம் ஏற்படவே அவர்களைத் துரத்திச் சென்ற உறவினர்கள் அவர்களில் இருவரைப் பிடித்துள்ளனர். மற்றையவர்கள் தப்பிச்சென்றர். தப்பிச்சென்றவர்கள் மீண்டும் வேறு இளைஞர்களுடன் கத்திகள், பொல்லுகள் சகிதம் இவர்களின் வீட்டுக்கு வந்து ரவீந்திரனை வாளால் வெட்டியுள்ளனர். அவர் அந்த இடத்திலேயே துடிதுடித்து மரணமானார்.

அவரது சகோதரனும் சகோதரியும் வாள்வெட்டுக் இலக்காகிக் காயமடைந்தனர். இச்சம்பவத்தைப் பயன்படுத்திக் கொண்டு அங்கு பிடித்துவைத்திருந்த இரு இளைஞர்களையும் மீட்டுக் கொண்டு அவர்கள் அனைவரும் தப்பிச்சென்றுள்ளனர். முற்பகையே இக்கொலைக்குக் காரணமெனத் தெரிவிக்கப்பட்டது.

ரவீந்திரன் செந்தூரன் (வயது 23), ரவீந்திரன் இலக்கியா (வயது 26) ஆகியோரே காயமடைந்தவர்களாவர். இவர்கள் யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். சடலம் பிரேத பரிசோதனைக்கான யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக