கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெற்பேலிப் பகுதி வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு ஏ.கே 47 ரக துப்பாக்கிகளை கொடிகாமம் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். அத்துடன் அதனை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் 22 வயது மதிக்கத்தக்க இளைஞரையும் கைது செய்துள்ளனர் எனத் தெரியவருகிறது. இன்று பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து படையினரின் உதவியுடன் சுற்றிவளைத்து தேடுதல்
நடத்தியபோது வீட்டுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கிகளை கைப்பற்றியுள்ளனர்.
அத்துடன் வீட்டிலிருந்த இளைஞரையும் கைது செய்து பொலிஸ் நிலையத்திற்குக் கொண்டு சென்றுள்ளனர் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர் மேலும் இந்த இளைஞரை விசாரணை செய்யக் கொழும்பிலிருந்து விசேட படைப் பிரிவினர் வருகை தரவுள்ளனர் எனவும் தெரியவருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக