அளுத்கமப் பகுதியில் பொலிஸார் பிறப்பித்திருந்த ஊரடங்கு உத்தரவை மீறினர் என்ற குற்றச்சாட்டில் 44 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இவர்களில் 25 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் எனவும், மற்றவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர் எனவும் அவர் மேலும் கூறினார். இதேவேளை, இந்த ஊரடங்கு உத்தரவு இன்று நான்கு மணி நேரங்கள் தளர்த்தப்பட்டிருந்தாலும், மறு அறிவித்தல் வரும்வரை அது
அமுலில் இருக்கும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கேகாலை மாவட்டத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் மாவனல்லை நகரில் இன்று பொதுபல சேனா அமைப்பினர் நடத்தவிருந்த ஒரு கூட்டதுக்கு எதிராக நீதிமன்றத்தில் தடை உத்தரவுவொன்றைப் பெற்று அதை அமுல்படுத்தியுள்ளனர் எனவும் அஜித் ரோஹண மேலும் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக