
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை, இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரணை நடாத்த விசேட ஆணைக்குழு ஒன்றை நிறுவியுள்ளார்.
இந்த விசாரணைக் குழுவினை நாட்டுக்குள் அனுமதிப்பதா இல்லையா என்பது குறித்து கட்சித் தலைவர்களுக்கு இடையில் நாளை கலந்தாலோசிக்கப்பட உள்ளது.
எதிர்வரும் 17ம் திகதி இது தொடர்பிலான யோசனைத் திட்டம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் 9 நாடாளுமன்ற உறுப்பினர்கள், சபாநாயகரிடம் குறித்த யோசனையை நேற்று ஒப்படைத்துள்ளனர்.
விசாரணைக்குழுவினை நாட்டுக்குள் அனுமதிப்பதா இல்லையா என்பது குறித்து விவாதம் நடத்தி, நாடாளுமன்றில் வாக்கெடுப்பு நடத்தி தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது.
இந்நிலையில் யோசனைக்கு ஆதரவளிப்பதா இல்லையா என இன்னமும் தீர்மானிக்கவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும் அறிவித்துள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக