
போர் காரணமாக காணி உரிமையை இழந்த உண்மையான காணி உரிமையாளர்களுக்கு மீளவும் காணிகளை வழங்கத் தீர்மானிக்க்ப்பட்டுள்ளது.
இது தொடர்பிலான விசேட உத்தேச சட்டமொன்று நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் இந்த சட்டத்தை நாடாளுமன்றில் சமர்ப்பி;க்க உள்ளார்.
ஒரு சொத்தை நபர் ஒருவர் பத்தாண்டுகளுக்கு மேலாக அனுபவித்து வந்தால் அந்த சொத்து அவருக்கு சொந்தமானது என கலாவரோதய சட்டம் கூறுகின்றது.
இந்த சட்டத்தினால் வடக்கு கிழக்கில் பல காணி உரிமையாளர்கள் பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர்.
1983ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரையில் போர் இடம்பெற்ற காரணத்தினால் இந்த சட்டத்தை சரியான முறையில் அமுல்படுத்த முடியவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
எனவே, போர் இடம்பெற்ற பிரதேசங்களில் காணி உரிமை தொடர்பில் காலவரோதய சட்டத்தை அமுல்படுத்த முடியாது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
காணிகளின் மூல உரிமையாளர்களுக்கு நியாயம் வழங்கும் நோக்கில் இவ்வாறு சட்டத் திருத்தம் மேற்கொள்ள உள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக