யாழ்.முகமாலைப் பகுதியில் இன்று திங்கட்கிழமை அதிகாலை இடம்பெற்ற விபத்தொன்றில் 7பேர் படு காயமடைந்துள்ளனர்.
கன்டர் ரக வாகனமும் வான் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதனாலேயே இவ் விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்துக்குள்ளானவர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பளைப் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் வல்வெட்டித்துறையினைச் சேர்ந்த 67 வயதான கணபதிப்பிள்ளை இராஜேந்திரம், 63வயதான இராசேந்திரம் ஸ்ரீநந்தலாதேவி ,30வயதான எஸ்.யேசுதாஸன்,50 வயதான தங்கராசா சுகந்தன் உரும்பிராயினைச் சேர்ந்த 70வயதான இராமநாதன் விக்னேஸ்வரன் இன்பரூட்டியினைச் சேர்ந்த 49வயதான நிமல் செல்ரன் யாழ்ப்பாணத்தினைச் சேர்ந்த 53வயதான அப்துல் முத்தாலிப்ஆகியோரே படுகாயமடைந்துள்ளனர்.
யாழிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்றுகொண்டிருந்த கன்டர் ரக வாகனமும், கொழும்பிலிருந்து யாழ்.நோக்கி வந்துகொண்டிருந்த வானுமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளன.
விபத்தில் படுகாயமடைந்த 7 பேரும் முதலில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்படடதுடன் அவர்களில் 6 பேர் மேலதிக சிகிச்சைகளுக்கான யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பளைப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இவ்விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக