வடமராட்சி தெற்கு மேற்குப் பிரதேச சபையில் தலைவர் இன்றி மறைந்த உறவுகளுக்காகவும், ஆன்மீகத் தலைவர் சுவாமி சித்ரூபானந்தாவுக்கும் இரண்டு நிமிட அஞ்சலி செலுத்தப்பட்டது. சபைத் தலைவர் பொ.வியாகேசு தலைமயில் இன்று காலை 10.15 மணியளவில் பிரதேச சபைக் கூட்டம் ஆரம்பமானது. இரண்டு நிமிட அகவணக்கம் இடம்பெற்றதைத் தொடர்ந்து, இறந்த உறவுகளுக்காக 2 நிமிட அஞ்சலி செலுத்த வேண்டும் என எதிரணி உறுப்பினர் இ.கணபதிப்பிள்ளை
எழுந்து நின்று கூறினார். அதனை ஆளும் தரப்பு உறுப்பினரான ஆ.மதியரசன் வரவேற்றார். இதனால் பிரச்சினைகள் உருவாகும் எனக் கூறி தலைவர் கூட்டத்தை விட்டு வெளியேறிச் சென்றார். இந்நிலையில் "தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றதே மக்களால்தான். மக்களுக்கான அஞ்சலியை நாம் ஏன் செலுத்த முடியாது?" - என உறுப்பினர் மதியரசன் கேள்வி எழுப்பினார். எனினும் தலைவர் இன்றி மறைந்த உறவுகளுக்கான அஞ்சலியையும், சித்ரூபானந்தா சுவாமிக்கான அஞ்சலியையும் உறுப்பினர்கள் ஒருமித்து செலுத்தினார்கள். இந்த நேரத்தில் ஆளும் தரப்பைச் சேர்ந்த இரு உறுப்பினர்கள் ஏற்கனவே வெளியேறிச் சென்ற தலைவரிடம் சென்று அவருடன் பேசி அழைத்து வந்தனர். இதற்கிடையில் அஞ்சலி நிகழ்வு முடிவுற்றதால் சபையை ஒத்தி வைப்போம் என ஆளும் தரப்பு உறுப்பினர்களாக ஆ. மதியரசன், இராசையா ஆகியோர் கூறி சபையை விட்டு எழுந்து சென்றனர். அந்த இரு உறுப்பினர்களையும் பார்த்து ஆளும் தரப்பு உறுப்பினரான சி.கணபதிப்பிள்ளை "ஒத்தி வைப்பு வேண்டாம். வாருங்கள் கூட்டத்தை தொடர்வோம்" எனக் கூற இரு உறுப்பினர்களும் வந்து சேர்ந்தனர். உறுப்பினர் கே.பரஞ்சோதி "இறந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்த எமக்கு உரிமை இல்லையா? இது என்ன ஜனநாயகம்?" - என ஆவேசமாகக் கேள்வி எழுப்பினார்.
மற்றொரு உறுப்பினரான கே. இரத்தினம் "கோழையர்கள் இங்கு தேவையில்லை; வீரர்கள்தான் இருக்கலாம். தலைவர் வெளியேறிச் சென்றால் செயலாளரும் ஏன் வெளியேறிச் செல்ல வேண்டும்? தலைவர் இல்லாவிட்டாலும் நாம் கூட்டத்தை நடத்த முடியும்" - எனத் தெரிவித்தார். தலைவர் வியாகேசு கருத்துத் தெரிவிக்கையில் "நீங்கள் அனைவரும் அங்கு ஒரு கதை, இங்கு ஒரு கதை கதைப்பீர்கள். நான்தான் பதில் சொல்லவேண்டும். இதனால் ஏற்படுகின்ற விளைவுகளை நீங்களே பொறுப்பேற்க வேண்டும்" - என்றார். எதிரணி உறுப்பினர் சி.கணபதிப்பிள்ளை மீண்டும் கருத்துத் தெரிவிக்கையில், "எங்களுக்கும் உணர்வு உண்டு" என்றார். மீண்டும் சபையை ஒத்தி வைக்கவேண்டும் என உறுப்பினர்கள் சிலர் தெரிவித்த போது அது ஏற்றுக்கொள்ளப்படாமையினால் உறுப்பினர் ஆ. மதியரசன் மீண்டும் சபையை விட்டு வெளியேறிச் சென்றார். இதனைத் தொடர்ந்து சபைக் கூட்டம் தலைவர் தலைமையில் தொடர்ந்து நடைபெற்றது. ஆரம்பத்தில் எதிரணி உறுப்பினர் ஒருவர் உட்பட 11 உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர். சிறிது நேரத்தில் கலந்து கொண்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்தது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக