சனி, 3 மே, 2014

ஜப்பான் கடல் எல்லைக்குள் சீன கப்பல்கள் நுழைந்ததால் பதற்றம்!!

ஜப்பானின் சென்காகு கடற்பகுதியை சீனா தன்னுடையது என்று உரிமை கொண்டாடி வருகிறது. ஆனால் ஏற்கனவே கடந்த 2012ஆம் ஆண்டு இந்த தீவுக் கூட்டங்களை ஜப்பான் தனக்கு சொந்தமாக்கி விட்டது.
சில மாதங்களுக்கு முன் ஜப்பானின் கட்டுப்பாட்டில் இருந்த கிழக்கு சீன கடற்பகுதி வான் எல்லையை தங்கள் நாட்டு எல்லை என்று சீனா வரையறுத்துக் கொண்டது.
மேலும்,
அந்த வான் எல்லைக்குள் அடிக்கடி தனது போர் விமானங்களை ஊடுருவச் செய்து பயிற்சியை மேற்கொண்டது. இதனால் ஜப்பான் மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுக்கு இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டது.
இதையடுத்து, சீனாவின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த அமெரிக்கா, வான் எல்லையில் குழப்பம் ஏற்படுத்துவதாக சீனா மீது குற்றம் சாட்டியது.
இதேபோன்று சீனா தொடர்ந்து பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வந்தால் இருநாட்டு ராணுவ ஒப்பந்தத்தின்படி ஜப்பானை பாதுகாக்கும் விதமாக சீனா மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கடந்த மாதம் 24 ஆம் தேதி வாஷிங்டனில் எச்சரித்திருந்தார்.
ஆனால், அமெரிக்காவின் எச்சரிக்கையை கண்டுகொள்ளாத சீனா சென்காகு தீவுகளை தன்னுடைய ஒருங்கிணைந்த பகுதியாக கூறிவருகிறது.
இப்படி அமெரிக்காவுடன் இணக்கமற்ற நிலைப்பாட்டில் சீனா உள்ள நிலையில், சென்காகு தீவுகளுக்கு 12 கடல் மைல் தொலைவில் இன்று காலை 3 சீனக்கப்பல்கள் திடீரென நுழைந்தது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறு சீனக்கப்பல்கள் அத்துமீறி நுழைவது மூன்றாவது முறையாகும். சீனா இதுபோன்ற சம்பவங்களில் அடிக்கடி ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக