சனி, 3 மே, 2014

துமிந்த எம்.பிக்கு எதிராக மனித படுகொலை குற்றச்சாட்டு!!



முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதியின் தொழிற்சங்க ஆலோசகருமான பாரத லக்ஷ்மன் பிரேமசந்திர உள்ளிட்ட நால்வரை படுகொலை செய்த வழக்கின் ஆரம்ப விசாரணைகளை நிறைவுசெய்த கொழும்பு மேலதிக நீதவான் பிரியந்த லியனகே நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உள்ளிட்ட 11 பேருக்கு எதிராக மனித படுகொலை குற்றச்சாட்டை முன்வைப்பதற்கு சாட்சிகள் இருப்பதாக தெரிவித்தார்.

அதனடிப்படையில் வழக்கை மேல் நீதிமன்றத்தின் விசாரணைக்கு மாற்றுவதாகவும் நீதவான் இன்று வெள்ளிக்கிழமை அறிவித்தார்.

2011 ஆம் அண்டு ஒக்ரோபர் மாதம் 8ம் திகதி நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களின் போது பாரத லக்ஸ்மன் பிரேமசந்திர உள்ளிட்ட நான்கு பேர் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர். 

இது தொடர்பான வழக்கு நீதவான் நீதிமன்றத்தில் சுமார் மூன்று வருடங்களாக விசாரணை செய்யப்பட்டு வந்தது.
இந்த சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு விசாரணைப் பிரிவினரால் விசாரணை நடத்தப்பட்டு நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக