முள்ளிவாய்க்கால் பகுதியில் வடக்கு மாகாண சபை உறுப்பினர் ஒருவர், பெற்றோரை இழந்த பிள்ளைகளுக்கு உதவிவழங்கும் நிகழ்வை நடத்தியபோது அங்குவந்த இராணுவத்தினர், இங்கு மூன்று நாள்களுக்கு எந்த நிகழ்வும் நடத்தக்கூடாது என்று எச்சரித்து நிகழ்வை குழப்ப முயற்சித்துள்ளனர். எனினும் தான் உதவி வழங்கும் நிகழ்வையே ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவித்த மாகாணசபை உறுப்பினர், மெளன வணக்கத்துடன் அந்த நிகழ்வை ஆரம்பித்தார். இந்த நிகழ்வை இன்று முற்பகல் மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் நடத்தியுள்ளார். நிகழ்வு
நடந்து முடியும்வரை இராணுவத்தினர் அங்கேயே காத்திருந்தனர். இதனால் முள்ளிவாய்க்கால் மேற்குப் பகுதியில் பதற்றம் நிலவியது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக