சீனாவின் ஐந்து இராணுவ அதிகாரிகள் மீது அமெரிக்கா, இணைய உளவு வேலையில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தி யுள்ளது. இந்த அதிகாரிகள் அமெரிக்க கணனிகளில் ஊடுருவி வர்த்தக ரகசியங்களை பெற்றதாக அமெரிக்க நீதித் திணைக்களம் குற்றம் சுமத்தியுள்ளது. சீனாவின் இணைய உளவு செயற்பாடு குறித்து அமெரிக்கா வெளிப்படையாக குற்றம் சுமத்தியுள்ளது இது முதல் முறையாகும்.
சீனாவுக்கு தேவையான இரகசியங்களை களவாடுவதற்காக அமெரிக்காவின் அணுசக்தி, உலோக மற்றும் சூரிய சக்தி தயாரிப்பு தொழிற்சாலைகளின் கணனிகளில் ஊடுருவி இருப்பதாக அமெரிக்க நீதித் திணைக்களம்
குறிப்பிட்டுள்ளது. அரசதுறை ஒன்றின் மீது அமெரிக்கா குற்றம் சுமத்துவது இது முதல் முறையாகும்.
இந்த குற்றச்சாட்டுகளை மறுக்கும் சீனா இவை உருவாக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் என குறிப்பிட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டுகள் குறித்து ஏற்கனவே எதிர்ப்பை வெளியிட்டிருப்பதாகவும் தவறை திருத்திக் கொள்ளும்படி அமெரிக்காவை வலியுறுத்தி இருப்பதாகவும் சீன வெளியுறவு அமைச்சு அறிவித்துள்ளது.
இந்த குற்றச்சாட்டு சீன-அமெரிக்க உறவு மற்றும் இருதரப்பு நம்பிக்கைக்கு பாதகமாக இருக்கும் என்றும் சீன வெளியுறவு அமைச்சின் அறிவிப்பில் சுட்டிக்காட்டப்பட்டிருப்பதாக ராய்ட்டர் குறிப்பிட்டுள்ளது. இதில் அலோகா வேல்ட் அலுமினியம், வொ'pங்டன் ஹவுஸ் மின்சார நிறுவனம். ஒலிகனி டெக்னொலஜpஸ், அமெரிக்க இரும்பு கூட்டுத்தாபனம், ஐக்கிய இரும்பு தொழிலாளர் சங்கம் மற்றும் சோலா வேல்ட் ஆகிய நிறுவனங்கள் இணைய ஊடுருவிகளால் இலக்கு வைக்கப்பட்டிருப்பதாக அமெரிக்க சட்டமா அதிபர் எரிக் ஹோல்டர் குறிப்பிட்டுள்ளார். "இந்த செயற்பாட்டுக்கு அமெரிக்க அரசு திட்டவட்டமாக தனது கண்டனத்தை தெரிவிக்கிறது" என்று குறிப்பிட்ட ஹோல்டர், "சர்வதேச சந்தையில் போட்டியிடும் எமது பொருளாதார பாதுகாப்பு மற்றும்; திறன் தேசிய பாதுகாப்புடன் நேரடி தொடர்புபட்டதாகும்" என்றார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக