டில்லியில் குடியரசுத் தலைவர் மாளிகை திறந்தவெளி முற்றத்தில் பதவி ஏற்பு விழா நடைபெற உள்ளது, 26ஆம் திகதி மோடியுடன் 40க்கும் அதிகமான அமைச்சர்களும் பதவி ஏற்கவுள்ளனர். 3 ஆயிரம் பேர் கலந்துகொள்ளும் விதமாக பதவி ஏற்பு விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பாஜக நாடாளுமன்றக் குழு தலைவராக மோடி தேர்வு செய்யப்பட்டதையடுத்து குடியரசுத் தலைவரை சந்தித்த மோடி ஆட்சியமைக்க உரிமை கோரினார். தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள 10 கூட்டணி கட்சிகளையும் சேர்த்து 335 எம்.பி.க்களின் ஆதரவு கடிதத்தை பிரணாப் முகர்ஜியிடம் ராஜ்நாத் சிங் அளித்தார். மேலும் மோடியை ஆட்சியமைக்க அழைக்கும்படி கோரிக்கை
விடுத்தார்.
பின்னர் ஜனாதிபதி மாளிகைக்கு வெளியே பேட்டியளித்த ராஜ்நாத் சிங், மோடி பதவியேற்பு விழா வரும் 26ஆம் திகதி நடைபெறும் என தெரிவித்தார். இந்த பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளுமாறு 3000 பேருக்கு அழைப்பு விடுக்க இருப்பதாகவும் ராஜ்நாத் கூறினார். ஜனாதிபதியின் அழைப்பை தொடர்ந்து நேற்று பிற்பகல் 3.15 மணிக்கு மோடி, ஜனாதிபதி மாளிகைக்கு சென்று பிரணாப் முகர்ஜியை சந்தித்தார். அப்போது மோடியை வரும் 26ஆம் திகதி பிரதமராக பதவியேற்க வருமாறு அதிகாரபூர்வமாக முகர்ஜி அழைப்பு விடுத்தார். இதற்கான கடிதத்தையும் மோடியிடம் முகர்ஜி வழங்கினார்.
இதன் பின்னர் ஜனாதிபதி மாளிகை முன் செய்தியாளர்களிடம் பேசிய மோடி, வரும் 26ஆம் திகதி மாலை 6.00 மணியளவில் தான் பிரதமராக பதவியேற்க உள்ளதாக தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக