பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறை உத்தியோகத்தர்களுக்கு எதிராக வழக்குத் தொடரத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
சிரேஸ்ட பிரதிக் காவல்துறை மா அதிபர் உள்ளிட்ட காவல்துறை உத்தியோகத்தர்கள் நீதிமன்றை அவமரியாதை செய்துள்ளதாகத் தெரிவித்து
வழக்குத் தொடர உள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அறிவித்துள்ளது.
காவல்துறையினர் நீதிமன்றை அவமரியாதை செய்ததாகத் தெரிவித்து வழக்குத் தொடர உள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் உபுல் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
காவல்துறையினர் பிழையான வகையில் பல்கலைக்கழக மாணவர்களை தாக்கி கைது செய்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
காவல்துறையினர் நீதிமன்றின் உத்தரவினை மதிக்காது, ஏதேச்சாதிகாரமாக செயற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
காவல்துறையினர் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டுமே தவிர, அரசியல்வாதிகளின் தேவைகளை பூர்த்தி செய்ய முயற்சிக்கக் கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அனுர சேனாநாயக்க என்ற சிரேஸ்ட பிரதிக் காவல்துறை அதிபரின் அறிவுறுத்தல்களுக்கு அமையவே மாணவர்கள் தாக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
அனுர சேனாநாயக்க ஓய்வு பெறும் வயதைக் கடந்து இரண்டு ஆண்டுகள் கடமையாற்றி வருவதாகவும், அவர் தனது இருப்புக்காக அரசியல்வாதிகளின் தேவைளைப் பூர்த்தி செய்து வருவதாகவும் உபுல் ஜயசூரிய குற்றம் சுமத்தியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக