புதுக்குடியிருப்புப் பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை மாலை 5 மணியளவில் மின்னல் தாக்கியதில் 6 வயதுச் சிறுமி ஒருவர் உயிரிழந்தார். இன்று மாலை மழை பெய்துகொண்டிருந்தபோது திடீரென இவர்களின் வீட்டு வளவில் நின்ற தென்னை மரத்தின் மீது இடி விழுந்து குடிசையையும் தாக்கியது. இச்சம்பவத்தில் புதுக்குடியிருப்பு 7ஆம் வட்டாரம் சிவநகரைச் சேர்ந்த தமிழரசன் உதயகுமாரி (வயது 6) என்ற சிறுமி உயிரிழந்தார். கர்ப்பிணியான இவரது தயார் சுபாசினி காயமடைந்தார். இவர்களின் வசித்த குடிசையும் சேதமடைந்தது. இச்சம்பவத்தால் விரக்தியடைந்த சிறுமியின் தகப்பன்
தன்னைத்தானே தாக்கிகொண்டதில் காயமடைந்தார். இருவரும் இவரது மனைவியும் புதுக்குடியிருப்பு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். உயிரிழந்த சிறுமியின் சடலம் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக