திங்கள், 26 மே, 2014

ஹெலிகொப்டர் பாகங்கள் முல்லைத்தீவில் மீட்பு!!

விபத்துக்குள்ளானதாக நம்பப்படும் இலங்கை விமானப்படையினருடைய ஹெலிகொப்டர் பாகங்கள் முல்லைத்தீவு சாலை கடலில் இருந்து நேற்று மீட்கப்பட்டுள்ளதாக விமானப்படைப் பேச்சாளர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகள் இந்த விமானத்தைச் சுட்டு வீழ்த்தியிருக்க வாய்ப்பில்லை என்று தெரிவித்துள்ள அவர், இயந்திரக்கோளாறு காரணமாக விமானம் வீழ்ந்து நொருங்கியிருக்கலாம் என்று தெரிவித்துள்ளார். மீட்கப்பட்ட பாகங்கள் காங்கேசன்துறைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதாகவும்,விசாரணைகளின் பின்னே விபத்துக்கான காரணம் தெரியவரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக