வடமராட்சி கிழக்கில் மகேஸ்வரி நிதியத்தினால் மேற்கொள்ளப்பட்டுவரும் மணல் அகழ்வு தொடர்பாக இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும்; ஈ.பி.டி.பியினரிடையே காரசார விவாதம் இடம்பெற்றது. இந்நிலையில் மணல் அகழ்வுக்குப் பெற்ற அனுமதி குறித்த ஆவணங்களை நாளை செவ்வாய்க்கிழமை இடம்பெறும் கூட்ட
அமர்வில் சமர்ப்பிக்குமாறு ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவரும் முதலமைச்சருமான க.வி.விக்னேஸ்வரன் கோரியுள்ளார்.
மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் யாழ்.மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் வட மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் இணைத் தலைமையில் இன்று காலை ஆரம்பமானது. இந்தக் கூட்டத்தின்போது மகேஸ்வரி நிதியத்தின் மணல் அகழ்வு குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கடும் விமர்சனங்களை முன்வைத்தனர். வடமராட்சி கிழக்கு - அம்பன் பகுதியில் மேற்கொள்ளப்படும் மணல் அகழ்வால் இயற்கையான நாவற்காடுகள் மற்றும் சவுக்கங்காடுகள் அழிக்கப்படுவதாகவும் அவர்கள் விசனம் வெளியிட்டனர். குறித்த பகுதியில் மணல் அகழ்வதற்கான மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் அனுமதியினை மககேஸ்வரி நிதியம் பெற்றிருக்கவில்லை என வடமாகாண சுற்றாடல் அமைச்சர் குற்றம்சாட்டினார்.
இதனையடுத்து புவிச்சரிதவியல் கனியவள சுரங்கங்கள் பணியகத்தின் யாழ்.மாவட்ட கிளை அதிகாரி மற்றும் மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் யாழ்.மாவட்ட கிளை அதிகாரி ஆகியோரிடம் இது குறித்து சபையில் கேள்வி எழுப்பப்பட்டது. இரு திணைக்கள அதிகாரிகளும் ஒருவருக்கொருவர் மாறுபட்ட கருத்துக்களை முன்வைத்தனர். அம்பன் பகுதியில் மணல் அகழ்வதற்கு மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் அனுமதி பெறப்படவேண்டும் என சட்ட ஒழுங்குகள் உள்ள நிலையில் தம்மிடம் அதற்கான அனுமதி பெறப்படவில்லை என மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் அதிகாரி சபையில் வெளிப்படையாக சபையில் கூறினார். 2003ஆம் ஆண்டு மணல் அகழ்விற்கான அனுமதி பெறப்பட்டது. அதன் பின் மணல் அகழ்வுக்காக அனுமதி மகேஸ்வரி நிதியத்தினால் பெறப்படவில்லை. 2004 ஆம் ஆண்டு மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் அலுவலகம் யாழ்.மாவட்டத்தில் திறக்கப்பட்டது. எனினும் வருடாவருடம் புதிப்பிக்கப்படவேண்டிய அனுமதி 2003 இன் பின்னர் புதுப்பிக்கப்படவில்லை எனவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.
அனுமதி பெறப்படவே இல்லை என மத்திய சுற்றாடல் அதிகாரசபை அதிகாரி தெரிவித்த நிலையில் சுற்றாடல் அதிகாரசபையில் அனுமதியும் தங்களுடைய திணைக்களத்தின் அனுமதியும் மகேஸ்வரி நிதியத்திற்கு உள்ளதாக புவிச்சரிதவியல், கனியவள சுரங்கங்கள் பணியகத்தின் அதிகாரி முரண்பாடாக பதிலளித்தார். இதற்கிடையில் கருத்து வெளியிட்ட மகேஸ்வரி நிதியத்தின் நிர்வாகி ஒருவர், மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் யாழ்.அலுவலகத்தில் மணல் அகழ்வுக்கான கோரிக்கை அனுப்பப்பட்டு மாவட்ட அலுவலகத்தில் உள்ள அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டதன் பின்னர் கொழும்பில் உள்ள மத்திய சுற்றாடல் அதிகார சபையிடம் அனுமதி பெற்றுள்ளதாக தெரிவித்தார். அவர் இந்தக் கருத்தினை கூறிக்கொண்டிருக்கையில் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் யாழ்.கிளை அதிகாரி தலையசைத்து இக்கூற்று பொய் என்பதுபோல மறுத்துக்கொண்டிருந்தார்.
மகேஸ்வரி நிதியத்தின் மணல் அகழ்வுக்கு சுற்றாடல் அதிகார சபையின் அனுமதி வழங்கப்படவில்லை என அவர் மீண்டும் மீண்டும் உறுதியாகத் தெரிவித்தார். இந்நிலையில் ஈ.பி.டி.பி. சார்பில் திடீரென எழுந்து பேசிய வட மாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் தவராசா, வடமராட்சி கிழக்கில் நடைபெற்றுவரும் மணல் அகழ்வு தொடர்பாக மேன்முறையீட்டு நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கில் மகேஸ்வரி நிதியம் உரிய அனுமதிகளைப் பெற்றுக்கொண்டே மணல் அகழ்கின்றது என தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றது. எனவே மணல் அகழ்வு விடயம் தொடர்பாக பேசவேண்டிய அவசியம் கிடையாது என கூறினார்.
இதன்போது எழுந்த தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் மகேஸ்வரி நிதியத்தின் மூலம் மணல் அகழ்ந்து கொள்ளையடிக்கின்றீர்கள் என குற்றம்சாட்டினர். இதனால் கோபமடைந்த ஒருங்கிணைப்பு குழு இணைத்தலைவரும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா கூட்டமைப்பு எம்.பிக்களை கண்டபடி திட்டித் தீர்த்தார். சில எம்.பிக்களின் கடந்த கால செயற்பாடுகளை சுட்டிக்காட்டி அவர் பேசினார்.இதனையடுத்து த.தே.கூ. - ஈ.பி.டி.பி. கட்சியினரிடையே கடுமையான வாய்த்தர்க்கம் மூண்டது. ஓரளவுக்கு இரு தரப்பு மக்கள் பிரதிநிதிகளதும் கொதிநிலை தணிந்தபோது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தவிற்கு அவதூறு உண்டாக்கும் வகையில் பேசிய பேச்சுக்களை உறுப்பினர்கள் மீளப்பெறவேண்டும் என ஈ.பி.டி.பி. சார்பு எம்.பிக்கள் இருவரும் கேட்டுக்கொண்டனர். அதற்கு த.தே.கூட்டமைப்பினர் மறுப்புத் தெரிவித்தனர். பின்னர் கூட்டத்தில் ஓரளவு அமைதி திரும்பி கூட்டம் தொடர்ந்து நடத்தப்பட்டது. நாளை இரண்டாவது நாள் மகேஸ்வரி நிதியத்தின் மணல் அகழ்வு அனுமதிப்பத்திரங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பில் நாளையும் விவாதங்கள் இடம்பெறலாம் எனக் கருதப்படுகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக