வேகக் கட்டுப்பாட்டை இழந்த இராணுவ ட்ரக் வண்டியொன்று யாழ். நாச்சிமார் கோயிலின் வாகனசா லைக் கட்டடத்தை உடைத்துக் கொண்டு உட்சென்ற சம்பவம் நெற்று சனிக்கிழமை காலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கே. கே. எஸ். வீதியினூடாக காங்கேசன் துறைநோக்கிச் சென்றுகொண்டிருந்த இராணுவ ட்ரக் வண்டி. வேகக் கட்டுப்பாட்டை இழந்து தடம்புரண்டுள்ளது. இதனையடுத்து நாச்சிமார் கோயிலில் அமைந்துள்ள அதன் சிற்ப வாகனசாலைக்குள் புகுந்து விபத்துக் குள்ளாகியுள்ளது. இராணுவ ட்ரக் வண்டி பலத்த சேதத்திற்குள்ளானதுடன் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கோயிலின் சிற்ப வாகனங்களும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்விபத்தில் ட்ரக் வண்டியில் பயணித்த 4 இராணுவ வீரர்கள்
படுகாயமடைந்தனர்.
இது தொடர்பான விசாரணைகளை யாழ். பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
இவ்விபத்தில் ட்ரக் வண்டி பலத்த சேதமடைந்ததுடன் வாகன சாலை கட்டடமும் பலத்த சேதத்திற்குள்ளானது. அத்துடன் அக் கட்டடத்திற்குள் இருந்த கோவில் திருவிழாவுக்கு பயன்படுத்தப்படும் திருவிழா சிற்ப வாகனங்களும் சேதமடைந்துள்ளன.
ட்ரக் வண்டியில் பயணித்த 5 இராணுவத்தினரும் நாச்சிமார் அம்மன் கோவிலில் வழிபாட்டில் ஈடுபட்டிருந்த பொது மகனும் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசா லையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்விபத்தில் சேதமடைந்த கோவில் சிற்ப வாகனங்கள் பல இலட்சம் ரூபாய் பெறுமதியானது எனவும் இவை அனைத்தும் இந்தியாவில் இருந்து தருவிக்கப்பட்டது எனவும் அங்கிருந்தவர்களால் தெரிவிக்க ப்பட்டது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக