ஞாயிறு, 18 மே, 2014

நாட்டின் அபிவிருத்திக்கு எனக்கு 10 வருடங்கள் போதும் பிரதமர் மோடி.......!!!!!!!

இந்தியாவை 21ஆம் நுற்றாண்டிற்கு ஏற்றவகையில் உருவாக்கி அபிவிருத்தியடையச் செய்ய எனக்கு வெறும் 10 ஆண்டுகள் மாத்திரமே வேண்டும் என பா. ஜ. க. தலைவரான நரேந்திர மோடி தெரிவித் துள்ளார். 1.25 பில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட நாட்டின் வளர்ச்சியை உலகின் எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது எனவும் மோடி தெரிவித் துள்ளார்.

நாட்டின் அபிவிருத்தியில் இந்திய குடிமகன் ஒவ்வொருவரையும் ஈடுபடுத் தவுள்ளேன். மக்கள் சாதி, மதம் போன்ற குறுகிய சிந்தனைக்கு அப்பால் சென்று நாட்டின் அபிவிருத்தியை கருத்திற் கொண்டு வாக்களித்துள்ளனர். இதன் மூலம் நாட்டின் வளர்ச்சியில் எவரும் போட்டியிட
முடியாது என்பது புலனாகிறது எனவும் கூறினார்.

543 பாராளுமன்ற ஆசனங்களில் 282 பெரும்பான்மை ஆசனங்களைப் பெற்று பா.ஜ.க. வெற்றியீட்டியிருப்பது குறித்த உத்தியோகபூர்வ முடிவுகள் தேர்தல் ஆணையத்தின் இணையத்தளத்தில் வெளியாகியுள்ளது.

30 வருடங்களின் பின்னர் வரலாறு காணாத மகத்தான வெற்றியைக் கொண்டாடும் வகையில் வானவேடிக்கைகள் வெடித்து மோடியின் பேரணியை வரவேற்று பா. ஜ. க. ஆதரவாளர்களும் மக்களும் இனிப்புகளை பரிமாறியும் நடனமாடியும் வெற்றியைக் கொண்டாடி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக