சனி, 3 மே, 2014

தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தொடர்பிலான சட்டங்களின் திருத்தம்!!!!

தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தொடர்பிலான சட்டங்களின் திருத்தம் செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சில தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மேற்குலக நாடுகளுடன் இணைந்து நாட்டுக்கு எதிராக செயற்பட்டு வருவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இவ்வாறு தேசத் துரோக செயற்பாடுகளில் ஈடுபட்டு வரும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கான நிதி மூலங்களை கண்டறியும் வகையில் சட்டத் திருத்தங்கள் செய்யப்பட உள்ளன.

தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் புறச் சக்திகளின் பணத்தைப் பெற்றுக் கொண்டு மேற்கொள்ளும் பாதிபுக்கள் தொடர்பில்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு, பாதுகாப்பு உயர் அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர். இதன் பின்னர் குறித்த நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டுவர ஜனாதிபதி அனுமதியளித்துள்ளார்.

எவ்வாறான திட்டங்களுக்காக யாரிடமிருந்து பணம் பெற்றக் கொள்ளப்படுகின்றது போன்ற சகல விபரங்களை வெளிப்படுத்தக் கூடிய வகையில் சட்டத்திருத்தம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 1977ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட சட்டங்களின் அடிப்படையிலேயே தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் நிர்வாகம் செய்யப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் நிதி மூலங்கள் தொடர்பில் இந்தியாவில் அமுல்படுத்தப்பட்டு வரும் கட்டுப்பாடுகளை இலங்கையிலும் சட்டமாக்க வேண்டுமென பாதுகாப்பு உயரதிகாரிகள் ஜனாதிபதியிடம் கோரியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக