இலங்கையில் கடும்போக்குவாதம் குறித்து பாப்பாண்டவர் முதலாம் பிரான்ஸிஸ் ஆண்டகை கருத்து வெளியிட்டுள்ளார். தனியொரு மத அடையாளத்தை உறுதி செய்யும் நோக்கிலான நடவடிக்கைகளை கடும்போக்குவாதமாகவே கருதப்பட வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இவ்வாறான நடவடிக்கைகளே அடக்குமுறைகள் மற்றும் வன்முறைகள் இடம்பெறக் காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.
மதக் கடும்போக்குவாதம் மதங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்திற்கு பாரிய அச்சுறுத்தலாக அமைந்துள்ளது என
அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அடக்குமுறைகள் கத்தோலிக்க சமூகத்தையும் பாதிக்கும் வகையில் அமைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். இலங்கைப் பேராயர்களை சந்தித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
25 ஆண்டு கால யுத்தத்தினால் ஏற்பட்ட காயங்களை ஆற்றவும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் கத்தோலிக்க பேராயர்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். கரிட்டாஸ் போன்ற முக்கியமான கத்தோலிக்க தொண்டு நிறுவனங்களினால் ஆற்றப்பட்டு வரும் சேவை பாராட்டுக்குரியது என அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக