சனி, 17 மே, 2014

(படங்கள்) முன்னுதாரணமாய் திகழும் சிதம்பரபுரம் ஸ்ரீ நாகராஜா வித்தியாலயம்!! முன்னாள் உப நகர பிதா திரு க.சந்திரகுலசிங்கம் (மோகன்)

வவுனியாவின் எல்லைக்கிராம குடியேற்றமான சிதம்பரபுரத்தில், அடிப்படை வசதிகள் எதுவுமின்றி வாழும் மக்களுக்கென ஒரு கல்வி ஆலயமாக திகழும்,  ஸ்ரீ நாகராஜா வித்தியாலயத்துக்கு, வித்தியாலய நிர்வாகத்தின் அழைப்பின் பெயரில் நேற்றைய தினம்(16/05) வவுனியா நகர சபையின் முன்னாள் உப நகர பிதாவும் கோவில்குளம் இளைஞர் கழக ஸ்தாபகருமாகிய திரு க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்கள் நேரில் சென்று பாடசாலையின் பௌதீக மற்றும் கல்வி நிலைமைகள் தொடர்பில் வித்தியாலய முதல்வர் திரு சி.வரதராஜா அவர்களுடன் கலந்துரையாடினார். 

இவ் கலந்துரையாடலில் வவுனியா நகர சபையின் முன்னாள் உப நகர பிதாவும் கோவில்குளம் இளைஞர் கழக ஸ்தாபகருமாகிய திரு க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்களுடன் கோவில்குளம் இளைஞர் கழகத்தைச் சேர்ந்த அய்யா, சதீஸ், காண்டீபன் ஆகியோரும் கலந்து கொண்டனர். 



 பூர்வீகம் செய்திகளுக்கு,  பாடசாலையின் நிலைமைகள் தொடர்பில் திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்கள் கருத்து  தெரிவிக்கும் போது..

100 வீதம் வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட மக்கள் பரம்பலை கொண்ட இந்த கிராமத்தில் அதிபர் திரு சி.வரதராஜா அவர்களின் வழிகாட்டலில்,   வளமான பலம் மிக்க அர்ப்பணிப்புள்ள ஆசிரியர்களின் அயராத முயற்சியிலும் இன்றைய நிலைமையில் நகர பாடசாலைகளை விட அழகான சூழலில் அமைந்துள்ளது போல காட்சி தருவது பிரமிக்க வைப்பதாகவும், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் மற்றும் நலன்விரும்பிகள் நாளாந்தம் வித்தியாலய வளர்ச்சிக்கு முன்னின்று உழைத்தால் சகல நிலைகளிலும் மாணவர்களின் திறன்கள் விருத்தியாகும் எனவும்,.

மாணவர்களின் மன வலிமை, உள விருத்தியும் மேலோங்கும் வண்ணம் அழகான அமைதியான இடமாய் திகழ பலர் சேவையாற்றுவது போற்றுதற்குரியது. மாணவர்களின் ஒழுக்கம் உயரிய கட்டுப்பாட்டில் இருப்பதுவும் எனக்கு மெய்சிலிர்க்க வைக்கிறது. எனவே இன்னும் சில காலங்களில் பெறுமதிமிக்க பெறுபேறுகளை நாம் எதிர்பார்ப்பதாகவும், முதல்வர் திரு சி.வரதராஜா அவர்களின் அயராத சேவை மனப்பாங்கும், விடா முயற்சியும், வினைத்திறன் மிக்க திட்டமிடலுமே இந்த வித்தியாலயத்தின் வளர்ச்சிக்கு காரணமாக அமைந்துள்ளதாகவும்,

இதனை போல ஏனைய எல்லைக்கிராம பாடசாலைகளும் இதனை முன்னுதாரணமாக கொண்டு செயற்பட்டால் எமது தேசத்தில் கல்வி மற்றும் இணைப்பாடவிதான செயற்பாடுகளில் பாரிய மாற்றங்களை எதிர்காலத்தில் எதிர்பார்ர்க்க முடியும் எனவும், அர்ப்பணிப்புடன் எமது எதிர்கால தலைவர்களுக்கு ஆசான்கள் வழி நடத்துவார்களாயின் நாளைய எமது கிராமங்களில் புதிய மாற்றத்தை அவதானிக்க முடியும் எனவும் தெரிவித்தார். 

பூர்வீகம் செய்திகளுக்காக ஓவியன் 

























கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக