செவ்வாய், 6 மே, 2014

இளையோரை பலி எடுக்கும் சிறிதரன் எம். பி!!! ஆங்கில பத்திரிகை செய்தியின் மொழிபெயர்ப்பு!!

மீண்டும் மீண்டும் இளையோரை பலி எடுக்கும் சிறிதரன் எம். பி
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீள கட்டி அமைக்கின்ற செயற்பாட்டில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கும் தொடர்பு இருப்பதாக புலனாய்வு வட்டாரங்களை மேற்கோள் காட்டி
கொழும்பில் இருந்து வெளிவருகின்ற ஆங்கில பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டு உள்ளது.
இச்செய்தி வருமாறு:-

“ வடக்கில் புலிகள் இயக்கத்தை மீள கட்டி எழுப்புகின்றமைக்கு முயன்ற புலிகள் இயக்க உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டமைக்கு பொறுப்பான பொலிஸார் ஐவரை கௌரவிக்க பொலிஸ் மா அதிபர் தீர்மானித்து உள்ளார்.
பளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இன்ஸ்பெக்டர் ஆனந்த ராஜபக்ஸ அடங்கலாக இதே பொலிஸ் நிலையத்தை சேர்ந்த உத்தியோகத்தர்களே இக்கௌரவத்தை பெறுகின்றனர். கௌரவிப்பு விழா விரைவில் பொலிஸ் தலைமையகத்தில் இடம்பெற உள்ளது.
பளையில் புலி ஆதரவு சுவரொட்டிகளை ஒட்டிக் கொண்டிருந்தபோது அகஸ்ரின் என்கிற புலிச் செயற்பாட்டாளர் கைது செய்யப்பட்டார். புலிகள் மீண்டும் வருகின்றனர் என்பது இச்சுவரொட்டிச் செய்தி.
புலி ஆதரவு புலம்பெயர் தமிழர்களின் உதவியுடன், பொருளாதார ஆதரவுடன் புலிகள் இயக்கத்துக்கு புத்துயிர் கொடுக்கின்ற முயற்சி இடம்பெறுகின்றது என விசாரணையில் அகஸ்ரின் தெரிவித்து உள்ளார்.
இவர் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் இவரின் சகாக்கள் கைது செய்யப்பட்டு, கோபி, தேவியன் ஆகியோரை நோக்கிய வேட்டை ஆரம்பிக்கப்பட்டது.
இருவரும் நெடுங்கேணிக் காட்டுப் பகுதிக்கு சென்று தலைமறைவாகினர். இதற்கு முன்னதாக கோபி பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஒருவரை சுட்டு காயப்படுத்தி இருக்கின்றார்.
புலிகள் இயக்க ஆதரவாளர்கள் மற்றும் அனுதாபிகளான புலம்பெயர் தமிழர்களால் வவுனியாவை சேர்ந்த வர்த்தகர் ஒருவரின் வங்கிக் கணக்குக்கு மிகப் பெருந்தொகை நிதி அனுப்பப்பட்டு இருந்த நிலையில் இவ்வர்த்தகரும் கைது செய்யப்பட்டார்.
புலிச் செயற்பாட்டாளர்களுடன் நெருக்கமான தொடர்புகளை வைத்து இருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பொலிஸ் புலனாய்வாளர்களால் மிக நெருக்கமாக அவதானிக்கப்பட்டு வருகின்றார். ”

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக