வியாழன், 22 மே, 2014

ஈரானுடன் நெருங்கிய உறவுகளைப் பேண விரும்புவதாக இலங்கை அறிவிப்பு.....!!!!

ஈரானுடன் நெருங்கிய உறவுகளைப் பேண விரும்புவதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. ஈரானுடான உறவுகளை மேலும் வலுப்படுத்திக் கொள்ள விரும்புவதாக இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஈரானிய ஜனாதிபதி ஹசன் ரவ்வானி (Hassan Rouhani)
 இடம் தெரிவித்துள்ளார்.சீனாவின் சங்காயில் நடைபெற்ற மாநாட்டில் இலங்கை ஈரான் ஜனாதிபதிகள் பங்கேற்றுள்ளனர்.
இந்த மாநாட்டின் இடை நடுவில் இரு நாட்டுத் தலைவர்களும் சந்திப்பு நடாத்தியுள்ளனர். இரு நாடுகளுக்கும் இடையில் நெங்கிய உறவுகள்
பேணப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். மேலும் உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார். இலங்கையுடனான உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள விரும்புவதாக ஈரானும் அறிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக