புதன், 21 மே, 2014

கனடாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகளில் விரிசல்......!!!!!

கனடாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான ராஜதந்திர உறவுகளில் அண்மைக்காலமாக விரிசல் நிலைமை நீடித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

யுத்த வெற்றிக் கொண்டாட்டங்கள் தொடர்பில் இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் ஷெல்லி வைட்டிங் (Shelley Whiting) அண்மையில் கருத்து வெளியிட்டிருந்தார்.
யுத்த வெற்றிக் கொண்டாட்டங்கள் நல்லிணக்கத்தைஏற்படுத்தாது எனவும், இந்த நிகழ்வுகளில் பங்கேற்கப் போவதில்லை எனவும் வைட்டிங் தெரிவித்திருந்தார்.
எனினும், கனேடிய உயர்ஸ்தானிகரின் இந்த கூற்றுக்கு இலங்கை அரசாங்கம்
கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளது.

கனேடிய உயர்ஸ்தானிகரை அழைத்து இலங்கை வெளிவிவகார அமைச்சு நேரடியாகவே அதிருப்தியை வெளியிட்டுள்ளது.
யுத்த வெற்றிக் கொண்டாட்டங்கள் தொடர்பிலான நிகழ்வுகளை கனேடிய உயர்ஸ்தானிகர் பிழையாக அர்த்தப்படுத்தியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இலங்கையுடன் ஆக்கபூர்வமான உறவுகளைப் பேணி வருவதாக கனடா தெரிவித்த போதிலும் அந்நாட்டு உயர்ஸ்தானிகரரின் நடவடிக்கைள் அவ்வாறு அமையவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
யுத்த வெற்றிக் கொண்டாடட்ங்களில் பங்கேற்க விரும்பாவிட்டால் அதனை பகிரங்கப்படுத்தாது, அரசாங்கத்திடம் தனிப்பட்ட ரீதியாக தெரிவித்திருக்க வேண்டுமென வெளிவிவகார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக