குறித்த மாணவிகள் இருவரும் மேலதிக வகுப்புகளுக்கு சென்று வீடு திருப்பிய போது, நேற்று(20) மாலை 3.00 மணியளவில் இனந்தெரியாத மூவரினால் வான் ஒன்றில் கடத்தப்பட்டதாக நானுஒயா பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மாணவிகள் இருவரும் அம்பேவலை பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், கடத்தியவர்கள் மது அருந்தி கொண்டிருந்த போது, மாணவிகள் இருவரும் அவர்களிடமிருந்து தப்பித்து வந்தள்ளதாகவும் முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளனர்.
மாணவிகள் இருவரும் இன்று(21) வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், வைத்திய அறிக்கையை பெற்றுக் கொண்ட பின்பு மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக