வியாழன், 22 மே, 2014

வடக்கு கிழக்கில் போதைப் பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளது....!!!!!

வடக்கு கிழக்கில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார்.
வடக்கு கிழக்கில் போதைப் பொருள் பயன்பாடு வியாபித்துள்ளமை பாரதூரமான ஓர் நிலைமையாகும்.

போதைப்பொருள் பிரச்சினைக்கு அரசாங்கம் உரிய தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்கவில்லை.
போரில் உயிரிழந்த சொந்தங்களுக்கு அஞ்சலி செலுத்தவும் தமிழ் மக்களுக்கு
இடமளிக்கப்படவில்லை.

இதனை நியாயமான நடவடிக்கையாக கருதப்பட முடியாது.

வடக்கு கிழக்கில் இராணுவத்தின் பிரசன்னம் குறைக்கப்படவில்லை.

இராணுவ பிரசன்னம் மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு இடையூறாக அமைந்துள்ளது என சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்த விவாதத்தில் கலந்து கொண்டு நேற்று,, நாடாளுமன்றில் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக