ஞாயிறு, 16 மே, 2010

ஜனாதிபதி ஈரான் பயணம்..!!

ஜி15 நாடுகளின் மாநாட்டில் கலந்துக்கொள்வதற்காக ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினர் இன்று அதிகாலை 5.20மணியளவில் ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்திற்கு சொந்தமான விஷேட விமானம் மூலம் ஈரான் தலைநகர் தெஹ்ரான் நோக்கி பயணித்துள்ளனர் இந்த மாநாட்டில் இலங்கை சார்பாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் அமைச்சின் செயலாளர் ரொமேஜ் ஜயசிங்க ஆகியோர் கலந்துக்கொண்டுள்ளனர் 18நாடுகளின் உறுப்பினை கொண்ட ஜீ15 நாடுகளுக்கு தற்போதைய தலைவராக ஈரான் ஜனாதிபதி மொஹமது அஹமட் நிஜாட் செயல்படுகிறார் இந்நிலையில் நாளை ஆரம்பமாகவுள்ள இந்த நாடுகளின் மாநாட்டின்போது ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷவுக்கு ஜி15 நாடுகளின் தலைமைபொறுப்பு வழங்கப்படவுள்ளது இதேவேளை ஜி15 நாடுகளின் தலைமைப்பொறுப்பு ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷவுக்கு கிடைக்கவுள்ளமை அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளுக்கு நன்மை தரும் என ஜீ15 நாடுகளின் வெளிநாட்டு அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர் ஈரானின் தெஹ்ரானில் நடைபெற்றுவருகின்ற வெளிநாட்டு அமைச்சர்களின் மாநாட்டில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டதாக ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள செய்தியில் தெரிவிக்கப்படுகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக