இந்தியாவின் புதிய பிரதமராக பா.ஜ.கவின் நரேந்திர மோடி, நாளை திங்கள்கிழமை மாலை பதவியேற்கிறார். இதற்கான விழா, குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்வில் தமிழக முதலமைச்சர் பங்கேற்கமாட்டர் என்பதுடன் அவர் சார்பாக ஒருவரைக்கூட நிகழ்வுக்கு அனுப்பமாட்டார் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த விழாவில் பங்கேற்க வருமாறு முதன் முறையாக தெற்கு ஆசிய நாடுகளின்
கூட்டமைப்பான "சார்க்' உறுப்பு நாடுகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்தியாவின் அழைப்பை ஏற்று மோடியின் பதவியேற்பு விழாவில் இலங்கை ஜனாதிபதி ராஜபக்ஷ கலந்துகொள்கிறார். இதற்காக அவர் இன்று தில்லை வருகிறார். இந்நிலையில், இலங்கை ஜனாதிபதி ராஜபக்ஷவை அழைத்ததற்கு தமிழக கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி மட்டுமின்றி, பாஜக கூட்டணிக் கட்சிகளான மதிமுக, பாமகவும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இலங்கை ஜனாதிபதி ராஜபக்ஷவுக்கு அழைப்புவிடுத்ததற்கு கடும் கண்டனம் தெரிவித்த முதல்வர் ஜெயலலிதா, புதிதாக பொறுப்பேற்கும் அரசின் இந்த நடவடிக்கை வெந்தபுண்ணில் வேல் பாய்ச்சுவதாக உள்ளது என்றும் கூறியிருந்தார். இதையடுத்து, நாளை நடக்கும் மோடி பதவியேற்பு விழாவில் பாஜக கூட்டணிக் கட்சிகள் பங்கேற்குமா என்ற கேள்வி எழுந்தது. அதேபோல, முதல்வர் ஜெயலலிதா பங்கேற்காமல் புறக்கணிப்பார் என்று் கூறப்படுகிறது. மேலும் தமிழக அரசு சார்பில் பிரதிநிதிகள் யாரையும் அனுப்பப் மாட்டார் எனவும் தெரிகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக