சனி, 3 மே, 2014

மூன்றாம் தமிழ் அரசியல் சக்தியொன்றின் அவசியம் எழுந்துள்ளது – வரதராஜ பெருமாள்!!

மூன்றாம் தமிழ் அரசியல் சக்தியnhன்றின் அவசியம் எழுந்துள்ளதாக வடக்கு கிழக்கு மாகாணசபையின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜ பெருமாள் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் அரசாங்க ஆதரவு தமிழ்க் கட்சிகளைத் தாண்டிய புதிய தமிழ் அரசியல் சக்தியொன்று உருவாக்கப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
மூன்றாம் சக்தியொன்றின் ஊடாகவே ஜனநாயக ரீதியில் தமிழ் மக்களுக்கு காத்திரமான தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்க முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். 13ம் திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் மூலம் தேசிய இனப்பிரச்சினைக்கு காத்திரமான தீர்வுத் திட்டமொன்றை பெற்றுக்கொடுக்க முடியும் என கருதவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஜனாதிபதி மெய்யாக அரசியல் சாசனத்தில் மாற்றத்தை கொண்டு வர விரும்பினால் பாராளுமன்றத் தெரிவுக்குழுவினை விடவும், அரசியல் சாசன பேரவை ஒன்றையே அமைத்திருக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக