வவுனியா கல்மடு மகாவித்தியாலயத்தில் க.பொ.த. உயர்தரத்தில் கலைப்பிரிவில் கல்வி கற்று வந்த மகாலிங்கம் றஜீவன்(வயது-17) என்ற மாணவனை நேற்றுமுதல் காணவில்லை என்று அவனது உறவினர்களால் வவுனியா பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. தரணிக்குளம் சாஸ்திரி கூழாங்குளத்தில் உள்ள வீட்டிலிருந்து, அதிகாலை 5 மணிக்கு பத்து கிலோ பயிற்றங்காய்களுடன் வவுனியா நகரப்பகுதியிலுள்ள தினசரி சந்தைக்கு சென்ற மாணவன் இன்றுவரை வீடுதிரும்பவில்லை எனத்
தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பில், வவுனியா பொலிஸ் நிலையத்திலும், தரணிக்குளம் பொலிஸ் நிலையத்திலும், மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனிடமும் மாணவனின் பெற்றோரால் முறையிடப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக