அல்கெய்டா தீவிரவாத அமைப்புடன் தொடர்புகளைக் கொண்டிருந்தார் எனக் கூறப்படும் இலங்கையர் ஒருவர் மலேசியாவில் கைது செய்யப்பட்டுள்ளார். இவருடன் சேர்த்து, மேலும் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் த ஸ்டார் ஒன்லைன் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இம்மூவரும் இந்தியாவில் வைத்தே கைது செய்யப்பட்டனர் என்றும் அந்த ஊடகம்
தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், இந்தியாவிலுள்ள வெளிநாட்டுத் தூதரகங்கள் மீது தாக்குதல்களை நடத்த திட்டமிட்டிருந்தனர் என முதற்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. கைதாகியுள்ள இலங்கையர், கடந்த 2011ஆம் ஆண்டு முதல் மலேசியாவில் தங்கியுள்ளார் என்றும் இவர் இதற்கு முன்னர் இருமுறை கைது செய்யப்பட்டவர் என்றும், தீவிரவாத அமைப்பில் ஆட்களைச் சேர்க்கும் பணியிலேயே இவர் ஈடுபட்டுள்ளார் என்றும் விசாரணைகள் மூலம் தெரியவந்ததாக மேற்படி ஊடக செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக