கொழும்பு கோட்டை ரயில் நிலையம் அருகில் வவுனியாவைச் சேர்ந்த நபர் ஒருவர் பணப்பையை பறிகொடுத்த சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது.
நேற்று முன்தினம் காலை வவுனியாவைச் சேர்ந்த நபர் ஒருவர் விமான நிலையம் சென்று விட்டு வீடு திரும்புவதற்காக கோட்டை புகையிரத நிலையத்திற்கு வந்த போது நிலையத்தில் விற்பனை செய்யப்பட்டு கொண்டிருந்த பத்திரிகை ஒன்றினை வாங்குவதற்காக பணப்பை எடுத்த போது திடீர் என பின்னால் வந்த நபர் ஒருவர் இவரை தள்ளி கீழே வீழ்த்தி விட்டு பணப்பையிலிருந்த 35ஆயிரம் ரூபாவை பறித்துக் கொண்டு சென்றுள்ளார்.
இத்திருட்டு சம்பவம் தொடர்பாக கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பணத்தினை பறி கொடுத்தவர் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக