வைத்திய சங்கத்தினரினதும் குடும்ப சுகாதார சேவை அதிகாரிகளினதும் இடையூறுகள் காரணமாக தாதியர்களினால் இதற்கு மேலும் பொறுமையாக சேவையாற்ற முடியாது.
ஆகையால் எதிர்வரும் 3ஆம் திகதி பணி புறக்கணிப்பு செய்யப் போவதாக பொது வைத்திய தாதியர் சங்கம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கு கடித மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
சுகாதார அமைச்சினாலும் அதன் அமைச்சரினால் விதிக்கப்படும் உத்தரவினை செயற்படுத்த தாதியர்களான நாம் தயாராக உள்ளோம்.
ஆனால், உத்தியோகப்பூர்வ மற்ற அமைச்சின் அதிகாரிகளின் உத்தரவினை நிறைவேற்ற நாம் ஒரு போதும் தயாரில்லை.
ஆகையால் குறித்த பிரச்சினைகள் தொடர்பாக சுகாதார அமைச்சர் கூடிய கவனம் செலுத்தி தீர்வு வழங்கினால் பணிக்கு செல்ல நாம் தயாராக உள்ளோம் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக