இலங்கையில் நடைபெறும் உலக இளைஞர் மாநாட்டுக்கென ஞாபகார்த்த முதல் நாள் தபால் உறை வெளியிடப் படவுள்ளதாக இளைஞர் விவகார திறன் அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
அமைச்சர் டலஸ் அழகப்பெருமவுக்கும் உலக இளைஞர் மாநாட்டு ஏற்பாட்டுக் குழுவினருக்கும் இடையே விசேட கூட்டமொன்று நடைபெற்ற போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
இளைஞர் விவகார திறன் அபிவிருத்தி அமைச்சும், தகவல் திணைக்களமும் இணைந்து இந்த முதல் நாள் தபால் உறையை வெளியிடுகிறது.
இளைஞர்கள் தொடர்பாக ஒரு மாபெரும் மாநாடு ஆசிய வலய நாட்டில் நடத்தப்படுவது இதுவே முதல் தடவை என்பதால், இதற்கு சரித்திர முக்கியத்துவம் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதாலேயே தபாலுறை வெளியிட உத்தேசிக்கப் பட்டுள்ளதாக அமைச்சர் டலஸ் தெரிவித்துள்ளார்.
முதல் நாள் தபால் உறையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் வெளியிட்டு வைக்கவுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக