புதன், 21 மே, 2014

கொழும்பில் தமிழ் ஆசிரியர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு !!!

கொழும்பு – பம்பலபிட்டி பகுதியில் அமைந்துள்ள பிரபல தமிழ் பாடசாலை ஒன்றில் ஆசிரியர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இன்று அதிகாலை குறித்து சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

37 வயதுடைய ஆசிரியர் ஒருவரே இவ்வாறு தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


கல்லூரி விடுதியில் தங்கியிருந்த உடற்பயிற்சி ஆசிரியரே தனது அறையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இது கொலையா அல்லது தற்கொலையா என இன்னும் தெரியவரவில்லை. சடலம் குறித்த இடத்திலேயே வைக்கப்பட்டுள்ளது. இன்று மரண விசாரணை மற்றும் பிரேத பரிசோதனை இடம்பெறவுள்ளது.

பம்பலபிட்டி பொலிஸார் குறித்த இடத்திற்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக