சிலியின் வடக்கு பகுதிக்கு பயணம் மேற்கொண்ட மாணவர்கள் குழு ஒன்று கடந்த சனிக்கிழமையன்று 7000 ஆண்டுகளுக்கு முந்தைய மம்மி ஒன்றை கண்டுபிடித்துள்ளனர் என்று 'லா டெர்செரா' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
உள்ளூர் மாணவர்கள் அகழ்வாராய்ச்சி நடைபெற்று வரும் மோர்ரோ டி அரிகாதளத்தை சுற்றிப் பார்த்தபோது தற்செயலாக இதனைக் கண்டுபிடித்துள்ளனர்.
தொல்பொருள் ஆராய்ச்சி பயிற்சிப்பட்டறையில் சேர்ந்து பயின்று வரும் இவர்கள் அகழ்வு தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அவர்களில் ஒருவர் நாய் மோந்து பார்த்து விட்டுச்சென்ற இடத்தில் ஒரு வித்தியாசமான அமைப்பைக் கண்டார். அந்த அமைப்பை மீண்டும் வல்லுநர்களுடன் ஆய்வு செய்த போது அங்கு ஒரு மம்மி இருந்ததை அவர்கள் கண்டனர்.
கடந்த ஏப்ரல் மாதத்தில் ஏற்பட்ட 8.2 ரிச்டர் அளவு நிலநடுக்கம் பல தொல்பொருட்களை பூமியின் மேற்புறத்துக்கு தள்ளியுள்ளது என்று செய்திகள் கூறுகின்றன.
இந்த மம்மி சின்சோர்ரோ கலாச்சாரத்தின் ஓர் அங்கமாகும் என்று பயண அமைப்பாளர் ஹான்ஸ் நீரா கூறினார். இந்த மம்மி கிடைத்திருப்பது இந்த பகுதியை ஒரு பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலுப்படுத்துகிறது என்றும் அவர் சொன்னார்.
இறந்தவர்களைப் பதனப்படுத்தி வைப்பதை ஒரு மதச்சடங்காகவே சின்சோர்ரோ கலாச்சாரத்தைப் பின்பற்றிய மக்கள் கருதினர் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
மேலும் அவர்கள் இந்த மம்மிகளை நடப்பு உலகத்துக்கும், இறந்தவர்களின் இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திக்கும் இடையிலான பாலம் என்று கருதினர் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இந்தக் கலாசாரம் கி.மு.7020 முதல் 1500 வரையிலான கால கட்டத்தில் உச்சத்தில் இருந்தது என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக