கடல் மார்க்கமாக சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முற்பட்ட 54 பேர் முல்லைத்தீவு கடற்பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இன்று அதிகாலை 5.00 தொடக்கம் 5.30 வரையான காலப்பகுதியில், கடற்படையினரால் இவர்கள் கைதுசெய்யப்பட்டதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கொமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்துள்ளார்.
இவர்கள் துறைமுகப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக கடற்படையினர் குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த காலங்களில் இவ்வாறு சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட பலர் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.
எனினும், சமீப காலங்களாக எவரும் இவ்வாறு கைதுசெய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எனினும் இன்று மீண்டும் இதுபோன்ற ஒரு சம்பவம் பதிவாகியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக