புதன், 21 மே, 2014

வவுனியாவில் 14 வயது சிறுமி, அக்காவின் கணவரால் 5 மாத கர்ப்பிணியான கொடூரம்!!!

வவுனியா, கிடாச்சூரி வீதியில் அமைந்துள்ள சுந்தரபுரம் கிராமத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமியினை 5 மாத கர்ப்பிணியாக்கிய சிறுமியின் உறவினராகிய 23 வயது இளைஞனை வவுனியா பொலிஸார் தேடிவருகின்றனர்.

குறித்த சிறுமியின் அக்காவின் கணவராகிய 23 வயது இளைஞன் சிறுமியை பாலியல் வல்லுறவு செய்துள்ளார். இதன் காரணமாக குறித்த சிறுமி 5 மாத கர்ப்பிணியாகியுள்ளார்.

இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். இதனையடுத்து இளைஞன் தலைமறைவாகியுள்ளதாகவும், பொலிசார் அவரைத் தேடி வருவதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக