வெள்ளி, 16 மே, 2014

வவுனியா கனகராயன்குளத்தில் சிப்பாய் உட்பட புதையல் தோண்டிய 11 பேர் கைது!!

கனகராயன்குளம் பகுதியில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டனர் என்ற சந்தேகத்தில் இராணுவச் சிப்பாய் ஒருவர் உட்பட பதினொரு பேரை விசேட அதிரடிப் படையினர் நேற்று வியாழக்கிழமை கைது செய்திருக்கின்றனர்.

அந்த பதினொரு பேரில் அறுவர் தமிழர்கள். எஞ்சிய ஐவரும் சிங்களவர்கள். விசேட அதிரடிப்படையினர்
அப்பகுதியில் தனி நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டு இவர்களை மடக்கினர் என்று பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோகண தெரிவித்தார். சந்தேகநபர்கள் பயன்படுத்தியதாகக் கருதப்படும் வாகனம் ஒன்றும் பொலிஸாரிடம் சிக்கியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக