புதன், 30 ஏப்ரல், 2014

"தொழிலாளர்களின் அர்ப்பணிப்பே அபிவிருத்தியின் அத்திவாரம்" மே தின வாழ்த்து செய்தியில் புளொட் மோகன்..!!!

தொழிலாளர்களின் சக்திக்கு ஏற்ற வகையில் சொந்த சட்டங்களை உருவாக்குவதற்கும், அவற்றைதொழிலாளர்களின் மத்தியில் நடைமுறைப்படுத்துவதற்குமான அதிகாரத்தை வெளிப்படுத்தும் தினமே  "மே" தினமாகும்.

அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிந்து தொழிலாளர்களின் உரிமைகளுக்காக எமது கழகம் தொடர்ந்தும் குரல் கொடுத்து செயலாற்றி வருவது யாவரும் அறிந்ததே.

தொழிலாளர்களின் தியாக உணர்வுகள் ஒருங்கிணைந்து வரலாற்றில் தடம் பதித்த இத் தினத்தில், தமது குருதியை வியர்வையாக சிந்தி அல்லும் பகலும் உழைக்கும் எமது தொழிலாளர்களுக்கு மே தின வாழ்த்துக்களை கூறுவதில் கழகத்தின் சார்பில் பெருமிதம் கொள்கிறேன். 

அந்த வகையில் மே தின பொதுக்கூட்டங்கள் உழைக்கும் வர்க்கத்துக்கு  பயனுள்ளதாகவும், எந்தவொரு அரசியல் கட்சி, தொழிற்சங்க சுய தேவைகளுக்காக பயன்படுத்தாமல், தொழிலாளர்களின் உரிமைக்கும் சிந்தனைக்கும் செயல்வடிவம் வழங்கும் பொது நோக்கு தன்மை கொண்டதாக அமைவதே காலத்தின் தேவையாகும்.

நன்றி
திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்),
முன்னாள் உப நகர பிதா, 
வவுனியா நகரசபை, 
வவுனியா.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக