செவ்வாய், 29 ஏப்ரல், 2014

வவுனியா கோவில்குளம் இளைஞர் கழக தயாரிப்பில் உருவான பாடலுக்கு, நோர்வேயில் சர்வதேச தமிழர் விருது..! (புகைப்படங்கள் இணைப்பு)

எமது கோவில்குளம் இளைஞர் கழக தயாரிப்பில் உருவான “தேன் சிந்தும் பூக்கள்” என்னும் பாடல் உலகம் முழுவதும் பங்குபற்றி சர்வதேச ரீதியில் நடைபெற்ற நோர்வே தமிழ் திரைப்பட விழாவில் 2014ம் ஆண்டின் சிறந்த இசை மற்றும் சிறந்த காட்சியமைப்பின் சர்வதேச தமிழர் விருதை வென்று சாதணை மண்ணில் சரித்திரம் படைத்துள்ளது..!


இசை மற்றும் சிறந்த காட்சியமைப்பின் சர்வதேச தமிழர் விருது எமது பாடல் இயக்குனர் பிரியந்தன் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
 
மேற்படி விருதினை பாடலின் தயாரிப்பு நிறுவனமான கோவில்குளம் இளைஞர் கழக முக்கியஸ்தரும், ஐரோப்பிய நாடுகளின் இணைப்பாளருமான திரு.சசிகரன் (சந்துரு) அவர்கள் நோர்வே தமிழ் திரைப்பட விழாவிற்கு சென்று அதனை நோர்வே தமிழ் திரைப்பட நிறுவன தலைவர் திரு.வசீகரன் அவர்களிடம் இருந்து பெற்றுக் கொண்டார்.
 
எமது இயக்குனர் பிரியந்தன் அவர்களுக்கும் நடிகர் கவிமாறன், நடிகை மிதுனா, இசையமைப்பாளர் ராஜேஷ், பாடல் வரிகள் எழுதிய பாமினி மற்றும் தலைப்பு வடிவமைப்பாளர் ஜெசிந்தன் ஆகியோருக்கும், இவ்விருதினை பெற உழைத்த அனைத்து உள்ளங்களுக்கும் இந்த தருணத்தில் எமது கழகம் சார்பான நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்து கொள்வதோடு, இந்த விருதுக்கும் வெற்றிக்கும் காரணமான இயக்குனர் பிரியந்தன் அவர்களை எமது கோவில் குளம் இளைஞர் கழகத்திற்கு அறிமுகம் செய்து வைத்த ஈழத்தின் முன்னணி இசையமைப்பாளரும் தற்போதைய இசை இளவரசருமான திரு.கந்தப்பு ஜெயந்தன் அவர்களுக்கும் எமது கழகம் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.
 
நன்றி.
கலைப்பிரிவு.
வவுனியா கோவில்குளம் இளைஞர் கழகம்

















 
 
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக