செவ்வாய், 29 ஏப்ரல், 2014

கர்ப்பிணிக் காதலியின் முதுகில் எரிவாயு கொள்கலனை கட்டி தீ வைத்த காதலர் - சீனாவில் சம்பவம்..!!

கர்ப்பிணியான தனது 21 வயது காதலியை கடத்திச் சென்ற காதலர் ஒருவர் அவரது முதுகில் எரிவாயு கொள்கலனை கட்டி தீ வைத்த விபரீத சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது.

குவாங்டொங் மாகாணத்திலுள்ள ஹூயிஸொயு நகரைச்  சேர்ந்த மோலியன் (வயது 36) என்ற காதலர் சம்பவ தினம் படுக்கையில் உறங்கிக்கொண்டிருந்த தனது காதலியான ஸூபானை அணுகி அவரைக்கொல்லப்போவதாக அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.
 
இதன்போது கூச்சலிட்ட ஸூபானை பலவந்தமாக தூக்கிச் சென்ற லீ மோலியன் அவரை காரின் பின் ஆசனப்பகுதியில் திணித்த பின் காரை அங்கிருந்து செலுத்திச்சென்றுள்ளார்.
 
சம்பவத்தை நேரில் கண்ட அயலவர்கள் செய்த முறைப்பாட்டையடுத்து பொலிசார் லீ மோலியனின் காரை தேடிக்கண்டுபிடித்து பின் தொடர்ந்தனர்.
 இந்நிலையில் காரை நிறுத்தி தனது காதலியின் முதுகுப்பகுதியில் எரிவாயு தாங்கியை கட்டிய லீ மோ லியன் அதற்கு தீ வைத்துள்ளார்.
 
எனினும் பொலிசார் துரிதமாக செயற்பட்டு காரிக்குள்ளிருந்த ஸூபானையும் லீ மோலியையும் வெளியில் இழுத்தெடுத்து அவர்களது  உடலில் பரவியிருந்த தீயை அணைத்தனர்.
 
இதனையடுத்து கடும் எரிகாயங்களுக்கு உள்ளாகி உயிருக்குப்போராடிக் கொண்டிருந்த அந்த ஜோடி  உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
 
அவர்கள் இருவரது உயிரைக் காப்பாற்ற மருத்துவமனையில் அருகருகேயுள்ள படுக்கைகளில் வைத்து அவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
 
இந்த சம்பவத்தில் ஸூ பானின் கர்ப்பத்திலுள்ள குழந்தை அதிசயிக்கத்தக்க வகையில் உயிர்தப்பியுள்ளது.
 
லீ மோலியனும் ஸூ பானும் 6 மாத காலமாகவே காதல் தொடர்பைக் கொண்டிருந்துள்ளனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக