வீட்டுக்குள் குழி தோண்டி மனைவி மற்றும் ஒரு மாத குழந்தையை கொன்று புதைக்க முயற்சித்த நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் மேல் மாகாணம் களுத்துறை மாவட்டத்தின் மில்லனிய பிரதேச செயலாளர் பிரிவில் நேற்று இடம்பெற்றுள்ளது.
சந்தேக நபரான பெண்ணின் கணவர், மனைவியை பிள்ளையையும் கொன்று புதைக்க, வீட்டு விறாந்தையில் சுமார் 6 நிலத்தை தோண்டியிருந்தாக மில்லனிய பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர், மனைவியையும் பிள்ளையையும் கொன்று விட்டு தானும் தற்கொலை செய்வதற்காக வீட்டில் கயிறு ஒன்றையும் கட்டியிருந்ததார்.
கணவர் குழியை வெட்ட ஆரம்பித்த போது மனைவி அதனை தடுத்ததாகவும் எனினும் இரவு 12 மணிக்கு பின்னர் சந்தேக நபர் மீண்டும் குழியை வெட்டியுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
இதனையடுத்து சந்தேக நபரின் மனைவி பொலிஸாருக்கு அறிவித்ததை தொடர்ந்தும் அங்கு சென்ற பொலிஸார் அவரை கைது செய்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக